Press "Enter" to skip to content

தன்மையை மாற்றிக்கொண்ட ஆடுகளம்: முக்கியத்துவம் பெற்ற டாஸ்

ஐபிஎல் தொடரில் ஆடுகளம் தற்போது 2-வது மட்டையாட்டம் செய்யும் அணிக்கு சாதகமாக உள்ளதால், டாஸ் முக்கியத்தும் பெற்றதாக விளங்குகிறது.

ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந்தேதி தொடங்கியது. ஐபிஎல் போட்டி என்றாலே கடைசி வரை வந்து த்ரில் வெற்றி பெறுவது சிறப்பம்சம். டாஸ் வென்ற அணி கண்ணை மூடிக்கொண்டு பந்து வீச்சை தேர்வு செய்யும்.

எவ்வளவு ஓட்டங்கள் அடித்தாலும் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் சேஸிங் செய்யும். ஆனால் இந்த முறை தொடக்க போட்டிகளில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதற்கு முக்கியக் காரணம் கேப்டன்கள் எதிர்பார்த்த பனிப்பொழிவு இல்லாததுதான். இதனால் 56 போட்டிகளில் முதல் 26 போட்டிகளில் 19-ல் முதலில் மட்டையாட்டம் செய்த அணியே வெற்றி பெற்றது.

தற்போது அபு தாபி, துபாயில் அதிக பனிப்பொழிவு உள்ளது. இதனால் சேஸிங் செய்யும்போது பந்து வீச கடினமான உள்ளது. ஆகவே 2-வது மட்டையாட்டம் செய்யும் அணி எளிதாக வெற்றி பெற்று வருகிறது.

குறிப்பாக கடந்த வாரம் நடைபெற்ற 9 போட்டிகளில் 7-ல் சேஸிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் 18-ல் 14 அணிகள் சேஸிங்கில்தான் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் வரும் போட்டிகளிலும் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 54 போட்டிகளில் நான்கு போட்டிகள்  டை ஆகி உள்ளன. மற்ற 50 போட்டிகளில் தலா 25 போட்டிகளில் முதலில் மட்டையாட்டம் செய்த அணியும், சேஸிங் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »