Press "Enter" to skip to content

பெண்கள் டி20 சேலஞ்ச் – முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி வெலோசிட்டி த்ரில் வெற்றி

பெண்கள் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சூப்பர் நோவாஸ் அணியை வெலோசிட்டி அணி வீழ்த்தியது.

பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முன்னோட்டமாக கருதப்படும் 3-வது பெண்கள் டி20 சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான சூப்பர் நோவாஸ் அணி, வெலோசிட்டியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற மிதாலி ராஜ் தலைமையிலான வெலோசிட்டி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 மட்டையிலக்குடுகளை இழந்து 126 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக அட்டப்பட்டு 44 ரன்களையும், கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 31 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக சோபிக்க வில்லை. வெலோசிட்டி தரப்பில் அசத்தலாக பந்துவீசிய ஏக்தா பிஸ்த் 3 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினார். ஆலம், காஸ்பெரக் ஆகியோர் தலா 2 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 127 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெலோசிட்டி அணிக்கு துவக்கமே மோசமாக அமைந்தது. டேனியல் வாட், சஃபாலி வர்மா, கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த அணி 38 ரன்களுக்கு 3 மட்டையிலக்குடுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் வந்த வேதா கிருஷ்ணமூர்த்தி, சுஷ்மா வர்மா ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வேதா கிருஷ்ணமூர்த்தி 29 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையிலும், சுஷ்மா வர்மா 34 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் வெலோசிட்டி அணி சரிவை சந்தித்தது. இறுதியில் சுனே லஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். வெலோசிட்டி அணி 1 பந்து மீதமிருந்த நிலையில், இலக்கை எட்டி 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் நோவாஸ் அணியிடம் அடைந்த தோல்விக்கு வெலோசிட்டி பழிதீர்த்து கொண்டது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »