Press "Enter" to skip to content

2021 பருவத்தில் எம்எஸ் டோனி கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை: சஞ்சய் பாங்கர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் எம்எஸ் டோனி, அடுத்த பருவத்தில் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை என சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மட்டையாட்டம் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கரும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான இர்பான் பதானும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்காலம் குறித்து பேசினார்கள்.

அப்போது சஞ்சய் பாங்கர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனி நீடிக்க வாய்ப்பில்லை. சுமையை குறைக்கும் வகையில் கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க வாய்ப்புள்ளது என்றார்.

மேலும், ‘‘2011 உலக கோப்பைக்குப் பிறகு தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக பணியாற்றினால், அதன்பின் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என கடுமையான தொடர் வரவிருக்கும் நேரத்தில், கேப்டன் பதவிக்கான நபர் தயாராகி விடமாட்டார் என்பதால், சுமையை குறைக்க சரியான நேரத்தில் விராட் கோலியிடம் கேப்டன் பதவியை கொடுத்தார் என்பது எனக்குத் தெரியும்.

அந்த வகையில் எம்எஸ் அடுத்த வரும் சென்னை அணியின் கேப்டனாக இருக்க மாட்டார் என உணர்கிறேன். வீரராக இடம் பிடித்து டு பிளிஸ்சிஸிடம் கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம். அவரின் கீழ் மாற்றங்கள் நடக்கும்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »