Press "Enter" to skip to content

அதிவேக ஒருநாள் கிரிக்கெட் சதம்: ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் 3-ம் இடம் பிடித்தார் ஸ்மித்

இந்தியாவுக்கு எதிராக 62 பந்தில் சதம் அடித்து அதிவேகமாக சதம் அடித்த 3-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றார் ஸ்டீவ் ஸ்மித்.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் மட்டையாட்டம் செய்த ஆஸ்திரேலியா 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 374 ஓட்டங்கள் குவித்தது.

ஆஸ்திரேலியாவின் ஓட்டத்தை குவிப்புக்கு ஸ்டீவ் ஸ்மித்தின் சதமும் முக்கிய காரணமாகும். ஸ்மித் 62 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். இதற்கு முன் 2015-ல் மேக்ஸ்வெல் 51 பந்தில் இலங்கைக்கு எதிராக சதம் அடித்தார். இதுதான் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனின் அதிவேக சதமாக உள்ளது. ஜேம்ஸ் பால்க்னர் 2013-ல் இந்தியாவுக்கு எதிராக 57 பந்தில் சதம் அடித்தார். இது 2-வது அதிவேக சதமாக உள்ளது. தற்போது ஸ்மித் 62 பந்தில் சதம் அடித்து 3-வது இடத்தில் உள்ளார்.

இந்த போட்டியில் ஸ்மித் 66 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 105 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »