Press "Enter" to skip to content

ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் அட்டவணை: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பார்சிலோனா- பிஎஸ்ஜி பலப்பரீட்சை

ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான அட்டவணை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெறும். இந்த வருடம் நடைபெற்ற லீக் ஆட்டங்கள் முடிவில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி, பேயர்ன் முனிச், டார்ட்மண்ட் உள்பட 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

இன்று யார் யாருடன் மோதுவது? என்பதை தெரிந்து கொள்வதற்கான குலுக்கல் நடைபெற்றது. குலுக்கல் முடிவில் ஒரு ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி அணியான பார்சிலோனா- பிரான்ஸின் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மற்ற போட்டிகளில் விளையாடும் அணிகள்:-

1. பொருஸ்சியா மோன்செங்லாட்பேக் (ஜெர்மனி) – மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து)

2. லஜியோ (இத்தாலி) – பேயர்ன் முனிச் (ஜெர்மனி)

3. அட்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்)- செல்சி (இங்கிலாந்து)

4. லெய்ப்ஜிக் (ஜெர்மனி) – லிவர்பூல் (இங்கிலாந்து)

5. போர்ட்டோ (போர்ச்சுக்கல்) – யுவென்டஸ் (இத்தாலி).

6. செவியா (ஸ்பெயின்) – பொருஸ்சியா டார்ட்மண்ட் (ஜெர்மனி)

7. அட்லாண்டா (இத்தாலி) – ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)

ஒவ்வொரு அணியும் எதிர் அணியுடன் லெக்1, லெக்2 என்ற அடிப்படையில் இரண்டு முறை மோத வேண்டும். கோல்கள் அடிப்படையில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

முதல் லெக் பிப்ரவரி 16 மற்றும் 17-ந்தேதி மற்றும் 23/24-ந்தேதிகளிலும், 2-வது லெக் மார்ச் 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதி, 16 மற்றும் 17-ந்தேதிகளிலும் நடைபெற இருக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »