Press "Enter" to skip to content

கடைசி சுற்றில் 22 ஓட்டங்கள் விளாசி சதம் அடிக்க தூண்டியது எது?- விவரிக்கிறார் ரிஷப் பண்ட்

கடைசி சுற்றில் 22 ஓட்டங்கள் வளாசி சதம் அடித்த தூண்டியது கோபம்தான் என ரிஷப் பண்ட் நடந்ததை விவரித்துள்ளார்.

இந்திய – ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது. பகல்-இரவு போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பந்துவீச்சு சுற்றில் இரண்டு அணிகளும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தன.

2-வது நாள் ஆட்டத்தில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹனுமா விஹாரி சதம் அடித்த நிலையில் ரிஷப் பண்ட் 81 ஓட்டங்கள் எடுத்த நிலையில் களத்தில் இருக்கும்போது 2-வது நாள் ஆட்டம் முடிய ஒரு ஓவர்தான் இருந்தது.

இந்த சுற்றில் தொடர்ச்சியாக 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து 73 பந்தில் சதம் விளாசினார். சதம் அடித்தது குறித்து ரிஷப் பண்ட் கூறுகையில் ‘‘சதம் அடிக்க 20 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். என்னுடைய முதல் ரியாக்சன், என்னால் அந்த ஓட்டத்தில் எடுக்க முடியாது என்பதுதான். முதல் பந்து என்னுடைய வயிற்று பகுதியில் தாக்கியது. இது எனக்கு கோபத்தை உண்டாக்கியது.

அதன்பின் எனக்குள்ளே ஒன்றிரண்டு ஷாட்கள் ஆட வேண்டும் என நினைத்தேன். அப்போது ஹனுமா விஹாரி என்னிடம் வந்து சதத்தை பூர்த்தி செய்ய முடியும் என்றதுடன், முயற்சி செய்து பார் என்றார். அப்படி செய்தால் நாளை காலை எந்த அவசரம் இல்லாமல் விளையாடலாம் என்றால். நான் முயற்சி செய்கிறேன் என்றேன். சதத்தை அடைய முடியும் என்றால் சிறந்ததாக இருக்கும். பவுலர் பந்து வீசினார். நான் எனது ஷாட்டை அடித்தேன்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »