Press "Enter" to skip to content

லா லிகா கால்பந்து : ரியல் மாட்ரிட் அணி 8-வது வெற்றி

லா லிகா கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிக் கிளப்பை தோற்கடித்தது.

மாட்ரிட்:

லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் மாட்ரிட்டில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்-அத்லெட்டிக் கிளப் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிக் கிளப்பை தோற்கடித்தது. ரியல் மாட்ரிட் அணியில் டோனி குரூஸ் 45-வது நிமிடத்திலும், கரிம் பென்ஜிமா 74-வது மற்றும் 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

அத்லெட்டிக் அணி தரப்பில் ஆன்டெர் கேபா 52-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். அத்லெட்டிக் வீரர் ரால் கார்சியா 13-வது நிமிடத்தில் 2-வது மஞ்சள் அட்டை பெற்றதால் (சிவப்பு அட்டை) நடுவரால் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடியதால் தடுமாற்றத்தை சந்தித்தது. 13-வது ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் அணி பெற்ற 8-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி மொத்தம் 26 புள்ளிகள் பெற்று கோல் வித்தியாசத்தில் முறையே முதல் 2 இடங்களில் இருக்கும் ரியல் சோசிடாட் (26 புள்ளிகள்), அட்லெடிகோ மாட்ரிட் (26 புள்ளிகள்) அணிகளுடன் சமன் செய்துள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »