Press "Enter" to skip to content

அறிமுக போட்டியில் காலடி எடுத்து வைத்ததுபோல் உணர்ந்தேன்: அஸ்வின் சொல்கிறார்

அடிலெய்டில் டே-நைட் தேர்வில் முதல் பந்துவீச்சு சுற்றில் 4 மட்டையிலக்கு வீழ்த்திய அஸ்வின், அறிமுக போட்டியில் களம் இறங்கியதுபோல் உணர்ந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் சோதனை அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் மட்டையாட்டம் செய்த இந்தியா 244 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் இந்தியா திணறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அபாரமாக பந்து வீசி ஸ்மித் உள்பட நான்கு பேரை வீழ்த்தி முத்திரை பதித்தார். உமேஷ் யாதவ், பும்ரா ஆகியோர் தலா 3 மட்டையிலக்கு வீழ்த்த ஆஸ்திரேலியா 191 ஓட்டத்தில் சுருண்டது.

இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிந்த பின் அஸ்வின் கூறுகையில் ‘‘சுமார் 10 மாதத்திற்குப் பிறகு மீண்டும் சோதனை கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சோதனை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவோம் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

லாக் டவுன் காலத்தில் விளையாட்டைப் பற்றி அதிகம் யோசித்தேன். பைத்தியமாக இருந்தேன். அதிகமாக பயிற்சி மேற்கொண்டேன். ஆகவே, இங்கே வந்து பந்து வீசுவதற்கு அது உதவியாக இருந்தது. பிங்க்-பால் தேர்வில் விளையாடுவது, பிங் பாலிற்கான புதிய சிந்தனை சிறந்த உணர்வாக இருந்தது.

களத்தில் இறங்கி விளையாடியது சிறந்த உணர்வு. மீண்டும் களம் இறங்கியதை நான் அறிமுக போட்டியாகவே உணர்ந்தேன். இதனால் மிகவும் மகிழ்ச்சியாக பந்து வீசினேன். ஸ்மித் மட்டையிலக்கு மிகப்பெரியது. அவர் மட்டையாட்டம் செய்வதை பார்க்கும்போது, முக்கியமான மட்டையிலக்கு. நான் உற்சாகம் அடைந்தேன்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »