Press "Enter" to skip to content

ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் வெற்றி உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை: கேன் வில்லியம்சன்

முன்னணி வீரர்கள் காயத்தால் விளையாடாத நிலையில், ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட சோதனை தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது. முதல் போட்டிக்குப்பின் விராட் கோலி, முகமது ஷமி விளையாடவில்லை.

2-வது போட்டிக்குப் பிறகு உமேஷ் யாதவ் விளையாடவில்லை. 3-வது போட்டிக்குப்பின் ஜடேஜா, அஷ்வின், பும்ரா, விஹாரி விளையாடவில்லை.

ரோகித் சர்மா முதல் 2 போட்டிகளில் விளையாடவில்லை. இஷாந்த் சர்மா தொடர் முழுவதும் விளையாடவில்லை.

முக்கியமான வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்தியாவின் வெற்றி உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘எப்பொழுதுமே, ஆஸ்திரேலியா மண்ணில் அவர்களை எதிர்த்து விளையாடுவது மிகவும் சவாலானதாக இருக்கும். இந்திய அங்கு சென்று, பல வீரர்கள் காயம் அடைந்த நிலையிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவையாகும்.’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »