Press "Enter" to skip to content

ஐசிசி தரவரிசை: புவனேஷ்வர் குமார் 11-வது இடத்திற்கு முன்னேற்றம்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசியதன் காரணமாக தரவரிசையில் முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அபாரமாக பந்து வீசினார். கடைசி போட்டியில் 42 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

மொத்தமாக 3 போட்டியிலும் 6 மட்டையிலக்கு வீழ்த்தினார். 29 சுற்றில் 174 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். சராசரி 22.50 ஆகும். காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் களத்திற்கு திரும்பிய புவனேஷ்வர் குமார் முதல் தொடரிலேயே அசத்தினார்.

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார். 

2-வது போட்டியில் 99 ஓட்டங்கள் விளாசி பென் ஸ்டோக்ஸ் மட்டையாட்டம் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி 24-வது இடத்தை பிடித்துள்ளார். பேர்ஸ்டோவ் 7-வது இடத்தை தக்கவைத்துள்ளார். இவர் 2-வது போட்டியில் 124 ஓட்டங்கள் விளாசினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »