Press "Enter" to skip to content

ரிஷப் பண்ட் முழுமையான மேட்ச் வின்னர்: விராட் கோலி, ரோகித் சர்மா பற்றி கங்குலி என்ன சொல்கிறார்?

ரிஷப் பண்ட் முழுமையான மேட்ச் வின்னர். அவரது ஆட்டத்தை வெறித்தனமாக ரசிப்பேன் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி உள்ளார். அவரிடம் உங்களுக்கு பிடித்தமான வீரர் யார்? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சவுரவ் கங்குலி பதில் அளிக்கையில் ‘‘இந்திய அணியில் சிறந்த வீரர்கள் சிலர் உள்ளனர். பிசிசிஐ தலைவராக இருந்து கொண்டு சிறந்த வீரர் யார் என்பதை நான் கூறக்கூடாது என்று நினைக்கிறேன். எனக்கு எல்லா வீரர்களும் பிடித்தமானவர்கள்தான். ஆனால், விராட் கோலி, ரோகித் சர்மா ஆட்டத்தை ரசிப்பேன்.

நான் ரிஷப் பண்ட் ஆட்டத்தை வெறித்தனமாக பார்ப்பேன். ஏனென்றால், அவர் முழுமையான மேட்ச்-வின்னர் என நினைக்கிறேன். பும்ரா சிறந்த வீரர், முகமது ஷமி சிறந்த வீரர். ஷர்துல் தாகூரை மிகப்பெரிய அளவில் பிடிக்கும். ஏனென்றால், அவர் தைரியமானவர்.

இந்தியாவில் மகத்தான கிரிக்கெட் திறமை உள்ளவர்கள் இருக்கின்றனர். சுனில் கவாஸ்கருக்குப்பின் யார் அவர் போன்று வரப்போகிறார்கள் என்று ரசிகர்கள் நினைத்தார்கள். அப்போது சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே வந்தார்கள். தெண்டுல்கர், டிராவிட் சென்ற பின் விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் வந்துள்ளனர். ஒவ்வொரு தலைமுறையிலும் உலகத்தை வெல்லக்கூடிய அளவிற்கு சிறந்த வீரர்கள் இந்தியா உருவாக்கும்’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »