Press "Enter" to skip to content

ஐதராபாத் மிகவும் பேலன்ஸான அணி: தேர்வில் தலைவலி உள்ளது- டேவிட் வார்னர்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் சிறப்பாக விளையாடும் அணிகளில் ஒன்று. அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார். பந்து வீச்சில புவி, ரஷித் கான், நடராஜன் ஆகியோர் அசத்துகிறார்கள்.

புவனேஷ்வர் குமார் கடந்த பருவத்தில் நான்கு போட்டிகளில் விளையாடிய நிலையில் காயத்தால் வெளியேறினார். அதன்பின் இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் தொடரில் களம் இறங்கினார். இரண்டு தொடரிலும் சிறப்பாக விளையாடினார்.

புவனேஷ்வர் குமார் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பியது சிறப்பானது என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில் ‘‘எங்கள் அணி மிகவும் பேலன்ஸ் ஆனது. ஆடும் லெவன் அணியில் சில வீரர்களை தேர்வு செய்வதில் தலைவர் உள்ளது. இருந்தாலும் அது சிறந்ததுதான்.

புவி மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பியதுது சிறப்பானது. இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினர். தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பந்து வீச்சு குழுவ பெற்றுள்ளோம். அதேபோல் அனல்பறக்கும் மட்டையாட்டம் வைத்துள்ளோம்.

முதல் 8 முதல் 9 போட்டிகளை சென்னை மற்றும் டெல்லியில் விளையாடுகிறோம். இரண்டு ஆடுகளங்களும் ஸ்லோவாக இருக்கும். அதற்கு ஏற்றபடி விளையாடுவோம்’’ என்றார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் 11-ந்தேதி முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »