Press "Enter" to skip to content

பிசிசிஐ-யின் வீரர்களுக்கான ஒப்பந்தம்: புவி-க்கு பின்னடைவு, ஹர்திக் பாண்ட்யா முன்னேற்றம்

பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஆண்டு ஒப்பந்தத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா தொடர்ந்து ‘ஏ’ பிளஸ் பிரிவில் நீடிக்கின்றனர்.

இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது. இந்த காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2020 முதல் 2021 செப்டம்பர் மாதம் வரையாகும். இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் ஏ பிளஸ் பிரிவில் இடம் பிடித்துள்ளனர்.

ஹர்திக் பாண்ட்யா 2019-2020-ல் ‘பி’ பிரிவில் இடம் பிடித்திருந்தார். தற்போது ‘ஏ’ பிரிவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். புவனேஷ்வர் குமார் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்திருந்தார். தற்போது ‘பி’ பிரிவிற்கு பின்னடைந்துள்ளார்.

சாஹர் ‘சி’ பிரிவிற்கு தள்ளப்பட்ட நிலையில், கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.

முகமத சிராஜ் மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் 2020-2021 ஒப்பந்தத்தில் இடம்பிடித்துள்ளனர்.

‘ஏ’ பிளஸ் பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 7 கோடி ரூபாயும், ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாயும், ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு முறையே 3 மற்றும் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.

அஷ்வின், ஜடேஜா, புஜாரா, ரகானே, தவான், கேஎல் ராகுல், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பண்ட், ஹர்திக் பாண்ட்யா ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளனர்.

சகா, உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர், மயங்க் அகர்வால் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளனர்.

குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், ஷுப்மான் கில், ஹனுமா விஹாரி, ஷ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »