Press "Enter" to skip to content

லகான் பட பாடலை எம்எஸ் டோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்: ஏஆர் ரகுமான்

கிரிக்கெட்டை ரசிகர்களிடம் எளிதான கொண்டு சென்று, பிரபலம் அடைய வைத்த பெருமை எம்எஸ் டோனிக்கும் உண்டு என்றால் மிகையாகாது.

ஆஸ்கார் விருது வென்று சாதனைப் படைத்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், விண்மீன் விளையாட்டு ஷோ கிரிக்கெட் லைவ் நிகழ்ச்சியில் பேசிய ஏஆர் ரஹ்மான் ‘‘லக்கான் படத்தில் உள்ள ‘சாலே சாலோ (Chale Chalo) பாடலை எம்எஸ் டோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அது கிரிக்கெட் விளையாட்டை இணைந்து விளையாட மக்களுக்கு உத்வேகமாக இருக்கக் கூடியது.

குட்டி தல சுரேஷ் ரெய்னாவுக்கு ‘மங்க்டா ஹாய் கியா (Mangta Hai Kya)’ பாடலை அர்ப்பணிக்க விரும்புகிறேன். ஏனென்றால், நான் எப்போதெல்லாம் பெங்களூரு செல்கிறனோ, அப்போதெல்லால் ரங்கீலாவில் இருந்து ஏராளமான பாடல்களை கேட்பார்கள்’’ என்றார்.

லகான் படத்தில் அமீர்கான் கதாநாயகனாக நடித்திருப்பார். ஆங்கிலேயர்கள் அந்த கிராமத்தில் இருந்து வெளியேற வேண்டுமென்றால் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என போட்டி வைப்பார்கள். அப்போது அமீர்கான் கிராமத்தில் உள்ள திறமையானவர்களை ஒன்றிணைத்து போட்டியில் வெற்றி பெறுவார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »