Press "Enter" to skip to content

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் : இந்திய வீரர் ரவிகுமார் தங்கம் வென்றார்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரவிகுமார் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

அல்மாதி:

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானின் அல்மாதி நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா 9-2 என்ற புள்ளி கணக்கில் அலிரிஜா நோஸ்ராடோலாவை (ஈரான்) தோற்கடித்து மீண்டும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

மற்றொரு இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா 65 கிலோ பிரிவில் கால்இறுதியில் யாங்சியோக்கையும் (தென்கொரியா), அரைஇறுதியில் பில்குனையும் (மங்கோலியா) சாய்த்து இறுதிப்போட்டியில் தகுட்டோ ஓட்டோகுரோவை (ஜப்பான்) எதிர்கொள்ள இருந்தார்.

ஆனால் முந்தைய ஆட்டங்களின் போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் வலியால் அவதிப்பட்ட பஜ்ரங் பூனியா கடைசி நேரத்தில் விலகினார். ஒலிம்பிக் நெருங்கும் நேரத்தில் ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டாம் என்று பயிற்சியாளர்கள் அறிவுறுத்தியதால் ஒதுங்கிய பஜ்ரங் பூனியா வெள்ளிப்பதக்கத்துடன திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »