Press "Enter" to skip to content

ஷிகர் தவான், ஸ்மித் பொறுப்பான ஆட்டம் – மும்பையை 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி

ஸ்டீவ் ஸ்மித், ஷிகர் தவானின் பொறுப்பான ஆட்டத்தால் மும்பை அணியை 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது டெல்லி அணி.

சென்னை:

ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் மட்டையாட்டம் தேர்வு செய்தது. டி காக் 1 ஓட்டத்தில் வெளியேறினார்.

இரண்டாவது மட்டையிலக்குடுக்கு ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

சூர்யகுமார் யாதவ் 24 ரன்களும், ரோகித் சர்மா 44 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா (0), பொல்லார்டு (2) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இஷான் கிஷனை 26 ஓட்டத்தில் வீழ்ந்தார்.

இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 சுற்றில் 9 மட்டையிலக்குடுக்கு 137 ஓட்டங்கள் அடித்துள்ளது.

டெல்லி அணி சார்பில் அமித் மிஷ்ரா 4 மட்டையிலக்குடும், அவேஷ் கான் 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

138 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. பிரித்வி ஷா 7 ரன்ன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய ஸ்மித் ஷிகர் தவானுடன் சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடி 2வது மட்டையிலக்குடுக்கு 53 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 33 ஓட்டத்தில் வெளியேறினார்.

அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகர் தவான் 45 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட் 7 ஓட்டத்தில் பெவிலியன் திரும்பினார்.

கடைசி 3 சுற்றில் வெற்றிக்கு 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 18வது ஒவரில் ஹெட்மயர் பவுண்டரி அடிக்க 7 ஓட்டங்கள் கிடைத்தது. 19வது சுற்றில் 10 ஓட்டங்கள் கிடைத்தது. லலித் யாதவும் ஹெட்மயரும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில், டெல்லி அணி 4 மட்டையிலக்கு இழப்புக்கு 138 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டெல்லி அணி தனது 3வது வெற்றியை பதிவு செய்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »