Press "Enter" to skip to content

உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி நடக்கும் – ஐ.சி.சி. உறுதி

முதலாவது உலக சோதனை சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் ஜூன் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது.

லண்டன்:

முதலாவது உலக சோதனை சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் ஜூன் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா-நியூசிலாந்து அணிகள் மகுடத்துக்கு மோதுகின்றன.

இந்த நிலையில் இந்த போட்டி நடப்பதில் திடீர் சிக்கல் உருவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டுவதால் இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டை சாராத மற்றவர்கள் இங்கிலாந்துக்கு வர அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

ஆனாலும் சோதனை சாம்பியன்ஷிப் இறுதி சுற்றை திட்டமிட்டபடி நடத்துவோம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) உறுதிப்பட கூறியுள்ளது. ‘கொரோனா பரவலுக்கு மத்தியில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை எப்படி பாதுகாப்புடன் வெற்றிகரமாக நடத்துவது என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும், மற்ற நாட்டு வாரியங்களும் செய்து காட்டியுள்ளன. அதையே தொடர்ந்து செய்ய முடியும் என்று நம்புகிறோம். எனவே திட்டமிட்டபடி இங்கிலாந்தில் ஜூன் மாதம் உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும். இது குறித்து இங்கிலாந்து அரசாங்கத்திடம் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம்’ என்று ஐ.சி.சி. கூறியுள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »