Press "Enter" to skip to content

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து ரபேல் நடால் என்ன சொல்கிறார்?

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து சில முன்னணி வீரர்கள்- வீராங்கனைகள் தங்களது கவலையை தெரிவித்துள்ளனர்.

டோக்கியோ நகரில் கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்றால் போட்டி இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா தாக்கல் குறைந்து இருந்தது.

தற்போது மீண்டும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஜப்பான் செல்வது சந்தேகம் என சில டென்னிஸ் வீரர்கள், வீரராங்கனைகள் சொல்லத் தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ரபேல் நடால் ‘‘இதுவரை எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரியாததால் என்னால் உறுதியான பதில் அளிக்க முடியவில்லை. கொரோனா தொற்று இல்லாத வழக்கமான உலகத்தில் நான் ஒலிம்பிக் போட்டியை தவற விடமாட்டேன். இதில் சந்தேகமே இல்லை. ஒலிம்பிக் போட்டிக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தற்போதைய சூழ்நிலையில் எனக்குத் தெரியவில்லை. அடுத்த இரண்டு மாதங்களில் என்ன நடக்கும் என்று பார்க்கலாம். ஆனால் எனது அட்டவணையை நான் ஒழுங்கமைக்க வேண்டியது அவசியம்’’ என்றார்.

செரீனா வில்லியம்ஸ், கெய் நிஷிகோரி, நவோமி ஒசாகா ஆகியோர் கொரோனா குறித்து தங்களது கவலையை தெரிவித்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »