Press "Enter" to skip to content

புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு – இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு

புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி வீரர்களின் பங்களிப்பு, உடல் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என தெரிகிறது.

கொழும்பு:

இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் 24 வீரர்களுக்கான ஒப்பந்தத்தை அறிவித்தது.

புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி வீரர்களின் பங்களிப்பு, உடல் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என தெரிகிறது.

2019 முதல் சிறப்பாக விளையாடியதற்காக 50 சதவீதமும், உடற் தகுதிக்கு 20 சதவீதமும், தலைமை பண்பு, தொழில் முறை, வருங்கால திறமை, அணிக்கான பங்களிப்பு ஆகியவற்றுக்காக 10 சதவீதமும் வழங்கப்படும் என வீரர்களுக்கு வழங்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய விதிமுறைகளுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வீரர்கள் சார்பில் வெளியிடப்பட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்த ஒப்பந்தம் நியாய மற்றது. வெளிப்படைத்தன்மை இல்லாதது. இதில் கையெழுத்திட நாங்கள் விரும்பவில்லை. வீரர்களை துப்பாக்கி முனையில் நிறுத்த வேண்டாம்.

புதிய விதிமுறைகளின் படி ஒவ்வொரு வீரரும் எத்தனை புள்ளிகள் சேர்த்துள்ளார்கள் என்பதை அறிவிக்க வேண்டும். மேலும் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களை சேர்ந்த வீரர்களின் சம்பளத்தை விடவும் எங்களுடைய சம்பளம் 3 மடங்கு குறைவாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அனைத்து வீரர்களும் ஒப்பந்தத்தில் வருகிற 3-ந் தேதிக்குள் கையெழுத்திட வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »