Press "Enter" to skip to content

வங்காளதேசம் சென்று ஆஸ்திரேலியா ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது

ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்த நிலையில், தற்போது 5 போட்டி கொண்ட தொடராக உயர்ந்துள்ளது.

வங்காளதேச கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சென்று இரண்டு சோதனை மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. அதன்பின் ஆஸ்திரேலியா அணி வங்காளதேசம் சென்று மூன்று போட்டிகளில் விளையாட இருந்தது.

ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டு சோதனை போட்டி தற்போது ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்பின் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது.

ஜிம்பாப்வேயில் இருந்து திரும்பிய பின் ஆஸ்திரேலியாவுடன் டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட தொடரை ஐந்து போட்டிகள் கொண்ட தொடராக மாற்றப்பட்டுள்ளது. வங்காளதேசத்தின் இந்த முடிவுக்கு ஆஸ்திரேலியா சம்மதம் தெரிவித்துள்ளது.

வங்காளதேசம் தற்போது இலங்கை தொடரில் விளையாடுகிறது. அதன்பின் வங்காளதேச பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அதன்பின் ஜிம்பாப்வே சென்று விளையாடுகிறது. அதன்பின் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் வங்காளதேசம் செல்கின்றன. வீரர்களுக்கான பயோ-பபுள் மற்றும் தனிமைப்படுத்துதலை மனதில் வைத்துள்ளோம். இந்த வகையில் அதிகமான போட்டிகளில் விளையாடுவது சிறந்தது அல்ல. ஆகவே இலங்கை தொடருக்குப்பின் எங்களுடைய போட்டி அட்டவணை குறித்து யோசிப்போம் என்று வங்காளதேசம் கிரிக்கெட் ஆபரேசன் சேர்மன் அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »