Press "Enter" to skip to content

ஜடேஜாவால் இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினம் – உலக சோதனை போட்டியில் இடம் பெற்ற வீரர் சொல்கிறார்

இந்திய அணி இங்கிலாந்து சென்று உலக சோதனை இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடுகிறது.

மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அக்‌ஷர் படேல். 27 வயதான இவர் 2014-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.

ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய 7 ஆண்டுகளுக்கு பிறகே அக்‌ஷர் படேலுக்கு சோதனை அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரில் அவர் விளையாடினார். 3 தேர்வில் 27 மட்டையிலக்குடுகளை கைப்பற்றி முத்திரை பதித்தார். 38 ஓட்டத்தை கொடுத்து 6 மட்டையிலக்கு வீழ்த்தியதே அவரது சிறந்த பந்து வீச்சாகும்.

இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரில் ஆல்ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்ட தால் அக்‌ஷர் படேலுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

தற்போது இந்திய அணி இங்கிலாந்து சென்று உலக சோதனை இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடுகிறது. இதற்கான இந்திய அணியில் அக்‌ஷர் படேல் இடம் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் ஜடேஜாவால் இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினமாக இருக்கிறது என்று அக்‌ஷர் படேல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியில் விளையாட முடியாமல் போனது. சோதனை போட்டிகளில் அஸ்வினும், ஜடேஜாவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்.

அதுவும் சமீப காலமாக ஜடேஜா மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் இன்னொரு இடது கை சுழற்பந்து வீரரான எனக்கு அணியில் இடம் கிடைப்பது சிரமமாக இருக்கிறது.

என்னுடைய திறமை மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. எனக்கான வாய்ப்பு வரும் போது அதை நிரூபிக்கும் வகையில் விளையாடுவேன். அப்படித்தான் இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக விளையாடினேன்.

நானும், ஜடேஜாவும் நல்ல நண்பர்கள். அவர் இருக்கும் இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும். சில நேரங்களில் அணியில் மாற்றம் செய்யப்படும்போது நமக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.

இவ்வாறு அக்‌ஷர் படேல் கூறி உள்ளார்.

அக்‌ஷர் படேல் ஒருநாள் போட்டியில் 45 மட்டையிலக்குடும் (38 ஆட்டம்), 20 ஓவர் ஆட்டத்தில் 9 மட்டையிலக்குடும்(12 ஆட்டம்) கைப்பற்றி உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »