Press "Enter" to skip to content

இந்திய சோதனை தொடரில் விளையாட விரும்பாத ஜாப்ரா ஆர்ச்சர்

முழங்கை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துள்ள ஜாப்ரா ஆர்ச்சர், முழு உடற்தகுதியுடன் டி20 உலகக்கோப்பை, ஆஷஸ் தொடரில் விளையாட விரும்புகிறார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர். தன்னுடைய அபார பவுன்சர் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டி வருகிறார். இவருக்கு முழங்கையில் நீண்ட நாட்களாக வலி இருந்து வந்தது.

இதனால் கடந்த வாரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அவரது காயம் குறித்து 4 வாரத்திற்குப்பின் ஆய்வு செய்து அணிக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான சோதனை தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகிவிட்டார். இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் ஐந்து சோதனை போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கு அவரை தயார் செய்ய இங்கிலாந்து விரும்புகிறது.

ஆனால், முழுமையாக உடற்தகுதி பெற்று உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் விளையாட இருப்பதாக ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜாப்ரா ஆர்ச்சர் கூறுகையில் ‘‘நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டபின், உடனடியாக அணிக்கு திரும்பக் கூடாது என தீர்மானித்துள்ளேன். ஏனென்றால், என்னுடைய முக்கிய கவனம், இங்கிலாந்து அணிக்காக டி20 உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் விளையாட வேண்டும் என்பதுதான்.

இரண்டும்தான் என்னுடைய இலக்கு. இந்திய தொடருக்கு நான் தயாராகிவிட்டால், விளையாடுவேன். அப்படி இல்லை என்றால், கோடைக்காலத்திற்குப் பிறகு சிறந்த வகையில் தயாராகிவிடுவேன்.

நான் சிலவாரங்களை மிஸ் செய்வேன். அப்படி இருந்தால் சில வருடங்கள் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெறுவேன். இந்த காயம் ஒரே நேரத்தில் முழுமையாக குணமடைந்து அத்துடன் முடிவுக்கு வரவேண்டும். இதனால்தான் அணிக்கு திரும்பும் தேதியை நான் எதிர்பார்க்கவில்லை. நான் இதை சரியாக கையாளவில்லை என்றால், காலத்திற்கும் எந்தவிதமான கிரிக்கெட்டும் விளையாடமுடியாது’’ என்றார்.

டி20 உலகக்கோப்பை அக்டோபர்- நவம்பரிலும், ஆஷஸ் தொடரில் டிசம்பர் 8-ந்தேதியும் தொடங்குகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »