Press "Enter" to skip to content

வீரர்கள் அதிருப்தி: ஜஸ்டின் லாங்கருக்கு எச்சரிக்கை விடுத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு

பயிற்சி முறையை மாற்றாவிடில், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து தூக்கப்படுவீர்கள் என்று லாங்கருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜஸ்டின் லாங்கர் இருந்து வருகிறார்.

ஆஸ்திரேலியா கடைசியாக இந்தியாவுக்கு எதிராக சோதனை போட்டியில் விளையாடியது. சொந்த மண்ணிலேயே நான்கு போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என இந்தியாவிடம் தோற்றது. மேலும், அடுத்தடுத்து சொந்த மண்ணில் இந்தியாவிடம் சரணடைந்தது.

இந்த தொடர் குறித்து வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது பெரும்பாலான வீரர்கள் ஜஸ்டின் லாங்கரின் பயிற்சி முறை சரியில்லை எனத்தெரிவித்தனர்.

இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு ஜஸ்டின் லாங்கர் மீது அதிருப்பதி அடைந்துள்ளது. இந்நிலையில் பயிற்சி முறையில் மாற்றம் செய்யவில்லை எனில், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு ஜஸ்டின் லாங்கர் நான்கு வருட ஒப்பந்தத்தில் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 2019 உலகக்கோப்பை, ஆஷஸ் தொடருக்கு முன் அவருடைய செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வீரர்களுடைய கருத்திற்கும் தகுந்த பதில் அளிப்பதை வைத்து லாங்கரின் பதவீ நீட்டிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »