Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் கிரிக்கெட் வீரர் நடராஜன்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார்.

சென்னை:

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை தடுக்க ஒரேவழியாக உள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் வேகமாக நடைபெற்று வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், இளைஞர்கள் முதல் முதியவர்கள் அவரை ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார். மேலும், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, தனக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் நடராஜன் பகிர்ந்துள்ளார். மேலும், அந்த டுவிட்டர் பதிவில், இன்று காலை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மக்களுக்காக தங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் அயராது உழைத்து வரும் சுகாதாரப்பணியாளர்களுக்கு லட்சக்கணக்கான நன்றிகள். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோம்’ என தெரிவித்துள்ளார். 

அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள நடராஜன் இந்திய அணியில் மீண்டும் களமிறங்குவார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »