Press "Enter" to skip to content

ஷாகிப் அல் ஹசன் கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாட வாய்ப்பில்லை

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான வலுவான அணியை களம் இறக்க வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு விரும்புகிறது.

வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். இவர் இலங்கைக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் தொடரை புறக்கணித்து விட்டு, ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட விரும்பினார். வங்காளதேச கிரிக்கெட் போர்டும் தடையில்லா சான்றிதழ் வழங்கியது.

ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமீயர் லீக் போட்டி நடைபெறுகிறது. ஜமைக்கா தல்லாவாஸ் அணி ஷாகிப் அல் ஹசனை ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆனால் ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியா அணி வங்காளதேசம் சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது. அதன்பின் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது.

மூன்று நட்சத்திர அணிகளுக்கு எதிராக வலுவான அணியை களம் இறக்க வங்காளதேசம் விரும்புகிறது. இதனால்  ஷாகிப் அல் ஹசனுக்கு கரீபியர் பிரிமீயர் லீக்கில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

‘‘இதுகுறித்து நாங்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அதற்கான நேரம் வரும்போது, அதுகுறித்து முடிவு எடுப்போம்’’ என வங்காளதேச கிரிக்கெட் போர்டின் கிரிக்கெட் செயல்பாடு தலைவர் அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »