Press "Enter" to skip to content

வில்வித்தை: இந்திய ஜோடி தீபிகா குமாரி – பிரவீன் ஜாதவ் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

3-வது செட்டில் தீபிகா குமாரி – பிரவீன் ஜாதவ் அபாரமாக அம்பு எய்ததன் மூலம், சீன தைபே ஜோடியை வீழ்த்தி காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தனர்.

வில்வித்தை கலப்பு அணிகளுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று காலை நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் இந்திய கலப்பு அணியான தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி சீன தைபேயின் சியா-என் லின்/சீ-சுன் டாங் ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட்டில் இந்திய அணி 35 புள்ளிகளும், சீன தைபே 36 புள்ளிகளும் பெற்றன. இதனால் சீன தைபே அணி 2 புள்ளிகள் பெற்றது. 2-வது செட்டில் இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றது. இதனால் இந்திய அணி 1-3 என பின்தங்கியது.

3-வது செட்டில் தோல்வி அல்லது டிரா ஆனால் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால் இந்திய அணி, இந்த செட்டை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அம்புகளை எய்தனர். நான்கு முறை எய்த அம்புகளுக்கும் தலா 10 புள்ளிகள் கிடைத்தது. சீன தைபே அணியால் 35 புள்ளிகள் பெற இந்தியா 2 புள்ளிகள் பெற்றது. இதனால் செட் பாயிண்ட் 3-3 என சமநிலை பெற்றது.

இதனால் 4-வது செட் நடைபெற்றது. இதில் முதல் அம்பில் இரு அணிகளும் 9 மற்றும் 8 என புள்ளிகள் பெற்றன. ஆனால் கடைசி இரண்டு அம்புகளிலும் இந்திய அணி தலா 10 புள்ளிகள் பெற்றது. ஆனால் சீன தைபே அணியால் 8 மற்றும் 9 புள்ளிகள் மட்டும் பெற முடிந்தது. இதனால் இந்திய அணி 37 புள்ளிகள் பெற்று 2 செட் பாயிண்ட்-ஐ பெற்றது. சீன தைபே அணி 36 புள்ளிகள் பெற்றது.

இதனால் தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி 5-3 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »