Press "Enter" to skip to content

இந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டி – கடைசி சுற்றில் வெற்றியை ருசித்தது இலங்கை

இந்திய அணிக்கெதிரான 2-வது 20 சுற்றிப் போட்டியில் இலங்கை அணி கடைசி சுற்றில் த்ரில் வெற்றி பெற்றது.

கொழும்பு:

இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது 20 சுற்றிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீசசை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் தவான் – ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். அறிமுக போட்டியில் களமிறங்கிய கெய்க்வாட் 21 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனர்.

இதனையடுத்து மற்றோரு அறிமுக வீரர் படிக்கல் களமிறங்கினார். கேப்டன் தவான் ஆட்டம் மந்தமாகவே இருந்தது. அவர் 42 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தனஜெயா பந்தில் போல்ட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டத்தில் வெளியேற இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 மட்டையிலக்கு இழப்பிற்கு 132 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

133 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அவிக்சா 11, சமராவிக்ரமா 8, சனகா 3, மெண்டீஸ் 2 என வெளியேறினர்.

17.2 சுற்றில் 105 ரன்களுக்கு 6 மட்டையிலக்குடுகளை இலங்கை அணி இழந்து இருந்தது. இந்நிலையில் தனஜெயா-கருரத்னே ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். அந்த ஜோடி புவனேஸ்வர் குமார் வீசிய 19-வது சுற்றில் 12 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் கடைசி சுற்றில் 8 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் அறிமுக பந்து வீச்சாளர் சக்காரியா அந்த ஓவரை வீசினார். கடைசி 2 பந்துகள் மீதம் உள்ள நிலையில் இலங்கை அணி 4 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »