Press "Enter" to skip to content

அஸ்வினுக்கு இதனாலதான் டி20 அணியில் வாய்ப்பா? – சர்ச்சையைக் கிளப்பும் கவாஸ்கர்

20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணிப் பட்டியலில் அஸ்வினுக்கு இடம் கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பின்னர் குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டியில் அஸ்வினுக்குத் தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

லண்டன்:

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட சோதனை தொடர் நடந்து வருகிறது. இன்று நடக்க வேண்டிய 5வது சோதனை போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சோதனை தொடரில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கு இந்திய நிர்வாகம் சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இப்படியான சூழலில் தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணிப் பட்டியலில் அஸ்வினுக்கு இடம் கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பின்னர் குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டியில் அஸ்வினுக்குத் தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்தியாவின் முன்னாள் கேப்டனும், இன்னாள் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், ‘அஸ்வினை இந்திய அணியில் மீண்டும் சேர்த்துள்ளது நல்ல செய்தி தான். ஆனால் விளையாடும் 11 பேரில் அவர் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அவரை ஆறுதல்படுத்துவதற்காக இப்படியொரு அறிவிப்பை வெளியிடிருக்கலாம்’ என்று சூசகமாக பேசியுள்ளார்.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »