Press "Enter" to skip to content

2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு இங்கிலாந்து அணி செய்ததை ஒருபோதும் மறக்கக்கூடாது: கவாஸ்கர் சொல்கிறார்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக கடைசி சோதனை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், எப்படியாவது அந்த போட்டியில் இந்தியா விளையாட வேணடும் என கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட சோதனை கிரக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நேற்று தொடங்குவதாக இருந்தது.

இந்திய பயிற்சியாளர்களுக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதியானதால் கடைசி நேரத்தில் போட்டி ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் உறுதியாக ஐந்தாவது சோதனை போட்டி நடைபெறும் என இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் போர்டுகள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

ஆனால், 2008-ம் ஆண்டு இந்தியாவில் மும்பை தாக்குதல் நடைபெற்ற பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவில் விளையாடியதை மறந்து விடக்கூடாது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘ரத்து செய்யப்பட்ட சோதனை போட்டிக்கான மறு அட்டவணை வெளியிடப்படும் என்றால் அது சரியான விசயமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இந்தியாவில் உள்ள நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இந்தியாவில் 2008-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றபோது, இங்கிலாந்து கிரிக்கெட் அணி செய்தது நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வந்து விளையாடினார்கள்.

நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை. அதனால் மீண்டும் இந்தியாவுக்கு வந்து விளையாட இயலாது எனக் கூறுவதற்கு தகுதியானவர்களாக இருந்திருப்பார்கள். கெவின் பீட்டர்சன் அணியை வழிநடத்தியதை மறந்து விடக்கூடாது. அவர்தான் அணிக்கு முக்கியமான நபராக இருந்தார். கெவின் பீட்டர்சன் இந்தியாவுக்குச் செல்ல விரும்பவில்லை என்று கூறியிருந்தால், ஒட்டுமொத்த விவகாரமும் முடிந்திருக்கும்.

கெவின் பீட்டர்சன் இந்தியா வருவதற்கு தயாராக இருந்தார். அவர் மற்ற வீரர்களை மனமாற்றம் செய்தார். அதனால் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு சோதனை போட்டிகள் கொண்ட  தொடரில் விளையாடியது.

அவர்களின் செயல்பாட்டை மறக்காமல் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பி.சி.சி.ஐ. அடுத்த வருடம் போட்டியை நடத்தலாம் எனச் சொல்கிறது. நாம் இன்னும் இங்கிலாந்து செல்ல வேண்டியுள்ளது. அடுத்த வருடம் ஐ.பி.எல். ஜூன் மாதத்தில் முன்னதாக முடிந்துவிடும். அதன்பின் போதுமான நேரம் உள்ளது. ஆனால், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை சார்ந்திருக்கும்.

பி.சி.சி.ஐ. இந்த சோதனை போட்டியை ஈடு செய்வது சிறந்த செய்தியாக இருக்கும். அது இரண்டு நாட்டின் கிரிக்கெட் உறவுக்கு சரியானதாக இருக்கும்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »