Press "Enter" to skip to content

நாடே திறந்திருக்கிறது: கொரோனா விமர்சனத்திற்கு ரவி சாஸ்திரி பதிலடி

புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதான் காரணமாக ரவி சாஸ்திரி கொரோனாவை அணிக்குள் கொண்டு வந்துவிட்டார் என்ற விமர்சனம் கடுமையாக வைக்கப்படுகிறது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட சோதனை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் நான்கு சோதனை போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. 4-வது சோதனை போட்டியின்போது ரவி சாஸ்திரிக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்தது.

பின்னர் மேலும் மூன்று பயிற்சியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் ஐந்தாவது மற்றும் கடைசி சோதனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடுமையான பாதுகாப்பு வளையத்தை கடந்து கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பயிற்சியாளர்களை தாக்கியது எப்படி? என விசாரிக்கும்போது, ரவி சாஸ்திரி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதுதான் காரணம் என தெரியவந்தது.

இதனால் ரவி சாஸ்திரிக்கு எதிராக விமர்சனம் எழுப்பப்பட்டுள்ளது. அவர் இன்னும் லண்டனில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார்.

இந்த நிலையில் விமர்சனத்திற்கு ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார். விமர்சனம் குறித்து பதில் அளித்த ரவி சாஸ்திரி ‘‘ஒட்டுமொத்த நாடே (பிரிட்டன்) திறந்திருக்கிறது. முதல் சோதனை போட்டியில் இருந்தே எதுவேண்டுமென்றாலும் நடந்திருக்கலாம்’’ என்றார்.

மேலும், இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடியதன் மூலம் சிறந்த கோடைக்கால கிரிக்கெட்டை பார்க்க முடிந்தது. கொரோனா காலத்திலும் சிறந்த தொடராக இருந்தது. இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினார்கள். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் கொரோனா காலத்தில் இந்திய அணி செயல்பட்டது போன்று எந்த அணியும் செயல்பட்டிருக்காது என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »