Press "Enter" to skip to content

இந்த மூன்று பேர்தான் எனக்கு கடும் போட்டியாளர்கள்: டிரென்ட் போல்ட்

இதுவரை நான் பந்து வீசியதில் கடினமான பேட்ஸ்மேன்கள் இவர்கள் மூவர்தான் என்று நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட்.  இவர் 2011-ம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணியில் விளையாடி வருகிறார். போல்ட், 73 சர்வதேச சோதனை போட்டிகளில் விளையாடி 292 மட்டையிலக்குடுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல், 93 ஒருநாள் போட்டிகளில் 169 மட்டையிலக்குடுகளையும், 34 டி20 போட்டிகளில் 46 மட்டையிலக்குடுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும்,  ஐ.சி.சி. ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் கடந்த ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.  கடந்த ஆண்டு மும்பை அணி 5-வது முறையாக கோப்பையை வென்றபோது டிரென்ட் போல்ட் அணியில் முக்கிய பங்காற்றினார்.

ஐ.பி.எல். 2021 தொடரின் 2-வது பகுதி ஆட்டம் வருகிற 19-ந்தேதி தொடங்ககிறது. இதில் விளையாட இருக்கும் டிரென்ட் போல்ட்  போட்டி குறித்து கூறியதாவது:-

வருகிற ஐபிஎல் போட்டியில் விளையாட  நான் தயாராக  இருக்கிறேன். இதுவரை நான் பந்து வீசியதில் கடினமான பேட்ஸ்மேன்கள் கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் ஆகிய மூவரும்தான். 

இதில், கிறிஸ் கெய்லுக்கு பந்துவீச எனக்கு ரொம்ப பிடிக்கும். இருந்தாலும், அவருக்கு பந்து வீசுவது மிகக் கடினம்.  

ரோஹித் சர்மாவுக்கு பந்து வீசுவதும் மிகக்கடினமாக  இருக்கும். அதேபோல,  கே.எல். ராகுலும் அருமையான வீரர்.

இவ்வாறு டிரென்ட் போல்ட் தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »