Press "Enter" to skip to content

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஹெய்டன், பிலாண்டர் நியமனம்

மேத்யூ ஹெய்டன் சிறந்த இடது கை தொடக்க பேட்ஸ்மேனாகவும் பிலாண்டர் ஸ்விங் மற்றும் சீம் பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தவர்கள்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய சேர்மனாக ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். நியமிக்கப்பட்ட உடனேயே ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் ஹெய்டன், தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் ஆகியோரை பயிற்சியாளராக நியமித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்த மிஸ்பா உல் ஹக் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் வெளியேறிய நிலையில் ஹெய்டன் மற்றும் பிலாண்டர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சக்லைன் முஷ்டாக், அப்துல் ரசாக் ஆகியோரை பயிற்சியாளராக நியமித்துள்ளது. இந்த நிலையில் ஹெய்டன், பிலாண்டர் பணிக்குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

மேத்யூ ஹெய்டன் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்த அனுபவம் பெற்றவர். வீரர்கள் அறையில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் இருப்பது அணிக்கு பலன் கொடுக்கும். பாகிஸ்தான் வீரர்கள் கூடுதலாக 10 சதவீதம் சிறப்பாக செயல்பட்டால் உலகக் கோப்பையை வெல்ல முடியும்.

பிலாண்டரை பற்றி எனக்குத் தெரியும். அவர் பந்து வீச்சை புரிந்து கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளார் என ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »