Press "Enter" to skip to content

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக முறை அவுட்டாகாமல் இருந்த பேட்ஸ்மேன்கள் விவரம்

ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் சி.எஸ்.கே.-யின் இரண்டு முக்கிய வீரர்கள் அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் 2008-ம் ஆண்டு தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 14-வது லீக் தொடர் நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இரு அணிகளும் 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், மட்டையிலக்கு கீப்பர் பேட்ஸ்மேனாகவும் இருப்பவர் எம்.எஸ். டோனி. இவர் பெரும்பாலும் போட்டியை முடித்து வைப்பதில் வல்லவர். இதனால் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை ஆட்டமிழக்காமல் இருந்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

எம்.எஸ். டோனி 70 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். ஜடேஜா 59 முறை ஆட்டமிழக்காமல் 2-வது இடத்தையும், பொல்லார்டு 50 முறை ஆட்டமிழக்காமல் 3-வது இடத்திலும், யூசுப்  பதான் 44 முறை ஆட்டமிழக்காமல் 4-வது இடத்திலும், வெயின் பிராவோ 39 முறை ஆட்டமிழககாமல் 5-வது இடத்திலும், ஏபி.டி. வில்லியர்ஸ் 38 முறை ஆட்டமிழக்காமல் 6-வது இடத்திலும் உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »