Press "Enter" to skip to content

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சாமுவேல் மீது ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் குற்றச்சாட்டு

சாமுவேல் மீது எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு அளித்த புகார் அடிப்படையில் ஐ.சி.சி. ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் குற்றம் சாட்டியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் மார்லோன் சாமுவேல்ஸ். வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற சாமுல்வேஸ் முக்கிய காரணமாக இருந்தார். அவர் எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு நடத்திய டி10 கிரிக்கெட் தொடரில் விளையாடினார். அப்போது 750 அமெரிக்க டாலர் அளவிலான விருந்தோம்பல் ரசீதை மறைத்ததாக சாமுவேல்ஸ் மீது எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு ஐசிசி-யிடம் புகார் தெரிவித்தது.

அதனடிப்படையில் 750 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு மேல் கொண்ட ரசீதை மறைத்தல், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை, தகவலை மறைப்பதன் மூலம் விசாரணைக்கு தடை அல்லது தாமதம் செய்வது  என நான்கு ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் ஐசிசி குற்றம்சாட்டியுள்ளத.

கடந்த 21-ந்தேதியில் இருந்து 14 நாட்களுக்குள் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்குமாறு சாமுவேல்ஸ்க்கு அவகாசம் வழங்கியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »