Press "Enter" to skip to content

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெய்ன் பிராவோவிற்குப் பதிலாக சுட்டிப்பையன் சாம் கர்ரன் அணியில் இடம் பிடித்துள்ளார்.

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 38-வது லீக் ஆட்டம் அபு தாபியில் மதியம் 3.30 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன் டாஸ் வென்று  மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெய்ன் பிராவோ இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக சுட்டிப்பையன் சாம் கர்ரன் இடம் பிடித்துள்ளார்.  கொல்கத்தா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, மோர்கன், தினேஷ் கார்த்திக், அந்த்ரே ரஸல், சுனில் நரைன், பெர்குசன், வரண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

1. ருதுராஜ், 2. டு பிளிஸ்சிஸ், 3. மொயீன் அலி, 4. சுரேஷ் ரெய்னா, 5. அம்பத்தி ராயுடு, 6. ரவீந்திர ஜடேஜா, 7. சாம் கர்ரன், 8. டோனி (கேப்டன்), 9. ஷர்துல் தாக்குர், 1. தீபக் சாஹர், 10. ஹேசில்வுட்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »