Press "Enter" to skip to content

டி20 உலகக் கோப்பை- தென் ஆப்பிரிக்க அணியை 118 ஓட்டங்களில் கட்டுப்படுத்தியது ஆஸி.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் முதலில் மட்டையாட்டம் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 118 ஓட்டங்கள் எடுத்தது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று இன்று தொடங்கியது. அபுதாபியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

முதலில் மட்டையாட்டம் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, துவக்கம் முதலே ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. முன்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். பின்கள வீரர்களும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர். 

எனவே, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 மட்டையிலக்கு இழப்பிற்கு 118 ரன்களே எடுத்தது.  அதிகபட்சமாக மார்க்ராம் 40 ஓட்டங்கள் சேர்த்தார். ஹென்ரிச் 13 ஓட்டங்கள், டேவிட் மில்லர் 16 ஓட்டங்கள், ரபாடா 19 ஓட்டங்கள் (நாட் அவுட்)  சேர்த்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹாசில்வுட், ஆடம் ஜம்பா, மிட்செல் விண்மீன்க் ஆகியோர் தலா 2 மட்டையிலக்கு எடுத்தனர். 

இதையடுத்து 119 ஓட்டங்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்குகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »