Press "Enter" to skip to content

பாபர் அசாம், ரிஸ்வான் போன்ற வீரர்கள் இல்லை என இந்தியர்கள் கூறும் நாள் வரும்- முன்னாள் பாக்., வீரர்

ஒரு வருடத்திற்கு முன் பாகிஸ்தானியர்கள், நம்மிடம் விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல். ராகுல் போன்ற வீரர்கள் இல்லையே என கூறிக்கொண்டிருந்தனர் என ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்

விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் நம்மிடம் இல்லை என பாகிஸ்தானியர்கள் கூறிய காலம் மாறி, இனி இந்தியர்கள் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் போன்ற வீரர்கள் இல்லை என கூறும் நாள் விரைவில் வரப்போகிறது என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் லத்திப் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி அரையிறுதி வரை சென்றது. அந்த அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் அதன் தொடக்க வீரர்களான கேப்டன் பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும்தான். பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சமீபத்தில் நடைபெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை அதிரடியாக வென்றது. அந்த தொடரின் ஒரு போட்டியில் பாக்., அணியின் தொடக்க வீரர்களான பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் இணைந்து முதல் மட்டையிலக்குடுக்கு 158 ஓட்டங்கள் சேர்த்தனர்.  

அதேபோல இந்த ஆண்டு தொடக்கத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டியில் இரு வீரர்களும் இணைந்து 197 ஓட்டங்கள் எடுத்தனர். பாபர் அசாம் – ரிஸ்வான் ஜோடி 2021-ம் ஆண்டில் மட்டும் நான்கு முறை 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பில் எடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் கூறியதாவது:-

ஒரு வருடத்திற்கு முன் பாகிஸ்தானியர்கள் நம்மிடம் விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல். ராகுல் போன்ற வீரர்கள் இல்லையே என கூறிக்கொண்டிருந்தோம்.

ஆனால் இப்போதைய நிலைமையை பார்க்கும்போது இந்தியர்கள் முகமது ரிஜ்வான், பாபர் அசாம் போன்ற வீரர்கள் இல்லையே என கூறும் நாள் விரைவில் வரப்போகிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறு ரஷித் லத்தீப் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »