Press "Enter" to skip to content

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்- பட்டம் வென்றார் அகானே

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் பிரிவில் தாய்லாந்தின் டெகாபோல்-சப்சிறீ ஜோடி தங்கம் வென்றது.

மாட்ரிட்:

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடந்த மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி மற்றும் சீன தைபே வீராங்கனை தாய் ஜூ யிங் ஆகியோர் விளையாடினர். 

போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய அகானே, உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான யிங்கை 39 நிமிடங்களில் வீழ்த்தினார்.

முதல் செட்டை 14-21 என்ற புள்ளி கணக்கில் எளிதில் கைப்பற்றிய அகானே, தொடர்ந்து 2வது செட்டையும் கடும் சவால் எதுவும் இல்லாமல் 11-21 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றி, சாம்பியன் பட்டத்தை வென்றார். 

கலப்பு இரட்டையர் பிரிவில் தாய்லாந்தின் டெகாபோல்-சப்சிறீ ஜோடி தங்கம் வென்றது. இறுதிப்போட்டியில் இந்த ஜோடி, 21-13, 21-14 என்ற செட் கணக்கில் ஜப்பான் நாட்டின் யுதா வதனாபே/அரிசா ஜோடியை வீழ்த்தியது. இந்த ஆண்டில் தாய்லாந்து ஜோடி பெற்ற ஐந்தாவது தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »