Press "Enter" to skip to content

புரோ கபடி சங்கம் போட்டி – உ.பி.அணியை வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ்

தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டம் 40-40 என்ற புள்ளி கணக்கில் டையில் முடிந்தது.

பெங்களூர்:

8-வது புரோ கபடி சங்கம் போட்டி பெங்களூரில் உள்ள ஷெராட்டன் கிராண்ட் ஒயிட் பீல்டு ஓட்டல் வளாகத்தில் நேற்று தொடங்கியது.

இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பை, பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி, புனேரி பல்தான், தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் ஜெய்ன்ட்ஸ், உ.பி.யோதா, அரியானா ஸ்டீல்சர்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்றன.

தொடக்க ஆட்டத்தில் மும்பை- பெங்களூர் அணிகள் மோதின. இதில் மும்பை 46-30 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.

அதைத் தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டம் 40-40 என்ற புள்ளி கணக்கில் டையில் முடிந்தது.வெற்றிபெற வேண்டிய ஆட்டத்தை தமிழ் தலைவாஸ் வீரர்கள் கோட்டை விட்டனர்.

3-வதாக நடந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- உ.பி.யோதா அணிகள் மோதின. இதில் பெங்கால் வாரியர்ஸ் 38-33 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

பெங்கால் வாரியர்ஸ் தரப்பில் இஸ்மாயில் 11 புள்ளிகளும், சுகேஷ் ஹெக்டே 8 புள்ளிகளும், மணீந்தர் சிங் 7 புள்ளிகளும் எடுத்தனர். உ.பி.யோதா அணி சார்பில் பர்தீப் நர்வால் அதிகபட்சமாக 8 புள்ளி எடுத்தார்.

இன்றும் 3 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் குஜராத்- ஜெய்ப்பூர் அணிகள் மோதுகின்றன. 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டெல்லி- புனே, 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அரியானா- பாட்னா அணிகள் மோதுகின்றன. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »