Press "Enter" to skip to content

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் – இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி பட்டம் வென்றது

இந்திய வீரர்கள் தாங்கள் எதிர்கொண்ட நான்கு பிரேக் பாயிண்டுகளையும் கைப்பற்றி, எதிர்தரப்பு போட்டியாளர்களை தோற்கடித்தனர்.

அடிலெய்ட்:

ஏடிபி டென்னிஸ் போட்டித் தொடரில் முதன்முறையாக இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ராம்குமார் ராமநாதன் ஜோடி இணைந்து விளையாடியது. 

அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய இரட்டையர்கள்,  முதல் நிலை வீரரான குரேஷியாவின் இவான் டோடிக்  மற்றும் பிரேசிலின் மார்செலோ மெலோ ஜோடியை எதிர்கொண்டனர். 

இதில் 7-6 (6) 6-1 என்ற கணக்கில் போபண்ணா-ராம்குமார் ராமநாதன் ஜோடி வெற்றி பெற்று பட்டம் வென்றுள்ளது. 

ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில், இந்திய வீரர்கள் தாங்கள் எதிர்கொண்ட நான்கு பிரேக் பாயிண்டுகளையும் காப்பாற்றி, இரண்டு முறை போட்டியாளர்களை முறியடித்தனர்.   முதல் செட்டில் வெற்றிக்கு கடுமையாக போராடிய இந்திய அணி இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்தியதால் வெற்றி சுலபமானது. 

இது போபண்ணா பெறும் 20வது ஏடிபி இரட்டையர் பட்டமாகும். ராம்குமார் பக்கத்தில் இருந்து விளையாடும் போது  பாயிண்ட்டை சீக்கிரம் முடித்துவிடலாம், அது ஒரு நன்மையாக இருந்தது என்று போட்டி நிறைவுக்கு பின் போபண்ணா தெரிவித்தார். 

பட்டம் வென்றதன் மூலம் போபண்ணாவுக்கும், ராம்குமாருக்கம் மொத்தம் 18,700 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையாக கிடைத்துள்ளது. மேலும் இருவருக்கும் தலா 250 தரவரிசைப் புள்ளிகளும் பெறுகிறார்கள். ஆஸ்திரேலிய ஓபன் தகுதிச் சுற்றுக்கு முன்னதாக கிடைத்துள்ள இந்த வெற்றி ராம்குமாருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »