Press "Enter" to skip to content

இந்தியாவுக்கு எதிரான 20 சுற்றிப் போட்டி வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 20 சுற்றிப் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது.

பிரிட்ஜ்டவுன்:

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதன் சோதனை தொடரை 1-2 என் கணக்கிலும், ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கிலும் இந்தியா இழந்தது.

இந்திய அணி அடுத்து சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுடன் விளையாடுகிறது. 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வருகிறது.

ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 6, 9 மற்றும் 11-ந் தேதிகளில் அகமதாபாத்திலும், 20 ஓவர் ஆட்டங்கள் பிப்ரவரி 16, 18 மற்றும் 20 தேதிகளில் கொல்கத்தாவிலும் நடக்கிறது.

இந்த போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதேபோல ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான 20 சுற்றிப் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாடிய அணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இது தொடர்பாக தேர்வுக்குழுத் தலைவர் டெஸ்மண்ட் கெய்ன்ஸ் கூறும்போது, ‘இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். இதனால் அணியில் மாற்றம் செய்ய விரும்பவில்லை. அதே வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் இடம் பெற்றுள்ளனர்’ என்றார்.

20 ஓவர் தொடரில் விளையாடும் வெஸ்ட் அணி வீரர்கள் வருமாறு:-

போல்லார்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரண், பேமியன் ஆலன், டாரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், கோட்ரெல், டோமினிக் டிரேக்ஸ், ஹோல்டர், ‌ஷகிஹோப், அகீல் ஹூசைன், பிரண்டன் கிங், கெய்ல் மேயர்ஸ், ரோவ்மன் பாவெல், ஷெப்பர்டு, ஓடியன் சுமித், ஹைடன் வால்ஷ் ஜூனியர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »