Press "Enter" to skip to content

கோலிக்கு ஆதரவான கருத்தை ரோஹித் முன்னரே சொல்லியிருக்க வேண்டும் – அதுல்வாசன் பேட்டி

எது நடந்தாலும் அது அணியின் மன உறுதியைக் குலைத்து விடக் கூடாது என்று கருதி ரோஹித் சர்மா சரியானதைச் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டி20 கிரிக்கெட் தொடங்கும் நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார். 

விராட் கோலி தொடர்ந்து ஃபார்ம் இன்றி தவித்து வருவது குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், உங்களை போன்ற நபர்கள் அமைதியாக இருக்கும்போது, அவர் ஆல்ரைட்டாக இருப்பார் என நினைக்கிறேன் என கூறியிருந்தார்.

ரோஹித் சர்மா பேட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான அதுல் வாசன், ஏஎன்ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.  

இந்திய உடைஸிங் ரூம் மற்றும் முகாமில் விராட் கோலிக்கும், ரோஹித்துக்கும் இடையே கருத்து மோதல் இருப்பதாக வதந்திகள் பரவி வருவதால், கோலிக்கு ஆதரவான கருத்தை ரோஹித் முன்னரே சொல்லியிருக்க வேண்டும் என்று தாம் கருதுவதாக அவர் கூறினார்.

ஒவ்வொரு வீரருக்கும் சில சிக்கல்கள் உள்ளன என்று நான் நினைக்கிறேன். வேறு யாராவது கேப்டனாக இருக்கும்போது அவர்கள் குறைவாக செயல்படுகிறார்கள் என்று கருதிவிட கூடாது என வாசன் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் பிஷன் சிங் பேடிக்கும்-சுனில் கவாஸ்கர் இடையேயும் மற்றும் கபில்தேவ்-சுனில் கவாஸ்கர் இடையேயும் கருத்து மோதல் இருந்ததை  வரலாற்று ரீதியாக நடந்தது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் குடும்பம் போல் வாழ்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். சில அருகாமைகள் அவமதிப்பை வளர்க்கின்றன, அது மிகவும் உண்மை. 

ஏதாவது நடக்கலாம், ஆனால் அது அணியின் மன உறுதியைக் குலைத்துவிடக் கூடாது என்று முன் வந்துள்ளதன் மூலம் ரோஹித் சரியானதைச்செய்துள்ளார்.  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »