Press "Enter" to skip to content

டி20 கிரிக்கெட் தொடங்கியது- முதல் ஓவரிலேயே மட்டையிலக்குடை இழந்த வெஸ்ட் இண்டீஸ்

இந்திய அணியில் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தசைப்பிடிப்பால் விலகியுள்ளால் அவருக்கு பதிலாக புதுமுக வீரர் ரவி பிஷ்னோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா:

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை 3- 0 என வென்று ஒயிட்வாஷ் செய்தது. 

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20  போட்டி கொல்கத்தாவில் இன்றிரவு தொடங்கியது. இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் தனது துவக்க வீரர் பிராண்டன் கிங்கை இழந்தது. 5 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 ஓட்டத்தை எடுத்த நிலையில், புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். 

இந்திய அணியில், காயம் காரணமாக லோகேஷ் ராகுல் விலகி விட்டதால் ரோகித் சர்மாவுடன், இஷான் கிஷன் துவக்க விரராக களமிறங்க உள்ளார். சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தசைப்பிடிப்பால் விலகியுள்ளால் அவருக்கு பதிலாக புதுமுக வீரர் ரவி பிஷ்னோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி: 1.ரோகித் சர்மா (கேப்டன்), 2. இஷான் கிஷன், 3. விராட் கோலி, 4. ரிஷப் பந்த் (மட்டையிலக்கு கீப்பர்), 5. சூர்யகுமார் யாதவ், 6. வெங்கடேஷ் அய்யர், 7. ஹர்ஷல் படேல், 8. தீபக் சாஹர், 9.புவனேஷ்வர் குமார், 10. ரவி பிஷ்னோய், 11.யுஸ்வேந்திர சாஹல்.

வெஸ்ட் இண்டீஸ் அணி: 1.கைல் மேயர்ஸ், 2. பிராண்டன் கிங், 3. நிக்கோலஸ் பூரன் (கீப்பர்), 4.கிரன் பொல்லார்ட் (கேப்டன்), 5. ரோவ்மேன் பாவெல், 6. ரோஸ்டன் சேஸ், 7.ரொமாரியோ ஷெப்பர்ட், 8. ஃபேபியன் ஆலன், 9. ஒடியன் ஸ்மித், 10.அகேல் ஹோசின், 11.ஷெல்டன் காட்ரெல்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »