Press "Enter" to skip to content

நாங்கள் அவரை மிகவும் நம்புகிறோம் – புவனேஸ்வர்குமாருக்கு ரோகித் சர்மா பாராட்டு

நிக்கோலஸ் பூரனும், போவெலும் ஆட்டத்தை இறுதி வரை கொண்டு சென்றது பாராட்டத்தக்கது என தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா:

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று 20 ஓவர் தொடரையும் கைப்பற்றியது.

கொல்கத்தாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 5 மட்டையிலக்கு இழப்புக்கு 186 ஓட்டத்தை குவித்தது.

ரி‌ஷப்பண்ட் 28 பந்தில் 52 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) , விராட் கோலி 41 பந்தில் 52 ரன்னும் (7 பவுண்டரி 1 சிக்சர்), வெங்கடேஷ் அய்யர் 18 பந்தில் 33 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரோஸ்டன் சேஸ் 3 மட்டையிலக்கு கைப்பற்றினார்.

பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 3 மட்டையிலக்கு இழப்புக்கு 178 ஓட்டத்தை எடுத்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 8 ஓட்டத்தை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போவெல் 36 பந்தில் 68 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்), நிக்கோலஸ் பூரன் 41 பந்தில் 62 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். புவனேஸ்வர் குமார், யசுவேந்திர சாஹல், பிஷ்னோய் தலா ஒரு மட்டையிலக்கு கைப்பற்றினர்.

18-வது ஓவர் வரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் பக்கம்தான் ஆட்டம் இருந்தது. கடைசி 2 சுற்றில் அந்த வெற்றிக்கு 29 ஓட்டத்தை தேவைப்பட்டது. நிக்கோலஸ் பூரனும், போவெலும் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 19-வது சுற்றில் புவனேஸ்வர் குமார் மிகவும் அபாரமாக பந்துவீசி ஆட்டத்தை மாற்றினார். முதல் 2 பந்தில் ஒரு ஓட்டத்தில் மட்டுமே கொடுத்தார். பூரனை அவுட் செய்தார். அந்த சுற்றில் அவர் 4 ஓட்டத்தை மட்டுமே கொடுத்து ஒரு மட்டையிலக்கு எடுத்தார். இதனால் கடைசி சுற்றில் வெஸ்ட் இண்டீசுக்கு 25 ஓட்டத்தை தேவைப்பட்டது.

ஹர்‌ஷல் படேல் கடைசி சுற்றில் 16 ஓட்டத்தை கொடுத்தார். போவெல் 3-வது மற்றும் 4-வது பந்தில் சிக்சர் அடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கடைசி 2 பந்தில் ஹர்‌ஷல் படேல் சிறப்பாக பந்து வீசினார். இதனால் 8 ஓட்டத்தில் வெற்றி கிடைத்தது.

19-வது சுற்றில் 4 ஓட்டத்தை கொடுத்து ஒரு மட்டையிலக்கு கைப்பற்றி வெற்றிக்கு காரணமாக இருந்த புவனேஸ்வர் குமாரை கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர்களுக்கு எதிராக விளையாடும்போது எப்போதுமே சிறிது பயம் ஏற்படும். இறுதியில் வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்தது மகிழ்ச்சியானது. இது எளிதானதல்ல என்பது எங்களுக்குத் தெரியும்.

புவனேஸ்வர் குமார் நெருக்கடியான நேரத்தில் 19-வது ஓவரை சிறப்பாக வீசினார். அவரது அனுபவம் கைகொடுத்தது. பல ஆண்டுகளாக நாங்கள் அவரை மிகவும் நம்புகிறோம். எப்போதுமே 19-வது சுற்றில் அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

விராட் கோலியின் ஆட்டம் முக்கியமானது. ரி‌ஷப்பண்டும், வெங்கடேஷ் அய்யரும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். வெங்கடேஷ் அய்யர் ஆட்டத்தில் முதிர்ச்சி இருப்பதை பார்க்க முடிகிறது. சில கேட்ச்களை தவறவிட்டது ஏமாற்றத்தை அளித்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் கூறும்போது, நிக்கோலஸ் பூரனும், போவெலும் ஆட்டத்தை இறுதி வரை கொண்டு சென்றது பாராட்டத்தக்கது. நாங்கள் நெருங்கி வந்துதான் தோற்றோம். எங்களது ஆட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்த வெற்றி மூலம் இந்தியா 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 சுற்றிப் போட்டி நாளை நடக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »