Press "Enter" to skip to content

மகாராஷ்டிராவில் 5 மைதானங்களில் ஐ.பி.எல். போட்டிகள் – அட்டவணை விரைவில் அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக ஒரே இடத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

மும்பை:

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2-ந் தேதி தொடங்குகிறது. இந்த ஐ.பி.எல். பருவத்தில் புதிதாக லக்னோ, குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன.

10 அணிகள் பங்கேற்பதால், ஐ.பி.எல். போட்டியின் ஆட்டங்கள் 74 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஒரே இடத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐ.பி.எல் லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மும்பை, புனேயில் உள்ள 5 மைதானங்களில் போட்டி நடக்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானம், டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம், பிரபோர்ன் மைதானம், நவி மும்பையில் உள்ள ரிலையன்ஸ் ஸ்டேடியம், புனேயில் உள்ள மைதானம் உள்ளிட்ட 5 இடங்களில் போட்டி நடக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் பிளே- ஆப் சுற்று மற்றும் இறுதி போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை அறிவிக்கிறது. அடுத்த வாரம் இந்த அட்டவணை வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 20 ஓவர் தொடர் லக்னோ, தர்மசாலாவிலும், சோதனை தொடர் மெகாலி பெங்களூரிலும் நடக்கிறது. இதேபோன்று ஐ.பி.எல். போட்டிகள் ஒரே பகுதியில் நடத்தப்படுகிறது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »