Press "Enter" to skip to content

மார்ச் 26ல் தொடங்குகிறது ஐபிஎல்- 40 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி

மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின்படி பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

புதுடெல்லி:

இந்த ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே மாதம் 29ம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லீக் போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற உள்ளன. மேலும், கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், 40 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு கூட்டத்திற்கு பிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்த ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல், இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ம் தேதி சனிக்கிழமை தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

இந்த ஆண்டு லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்ட நிலையில், மும்பையின் வான்கடே ஸ்டேடியம், பிரபோர்ன் ஸ்டேடியம், நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானம் மற்றும் புனேவில் உள்ள கஹுஞ்சே ஸ்டேடியம் ஆகியவற்றில் 74 போட்டிகள் நடைபெறவுள்ளன.

மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின்படி பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். துவக்கத்தில் அனுமதிக்கப்படும் பார்வையாளர்கள் 40 சதவீதமாக இருக்கும். கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தால், நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தால், முழு அளவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படலாம் என  தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிளே-ஆஃப் சுற்று ஆட்டங்கள் நடைபெறும் மைதானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த வாய்ப்பு உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »