Press "Enter" to skip to content

சோதனை கிரிக்கெட்தான் உண்மையான கிரிக்கெட் – விராட் கோலி பெருமிதம்

நாட்டிற்காக அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணமே எப்போதும் இருந்தது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மொகாலி:

இந்தியா-இலங்கை மோதும் முதலாவது சோதனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100-வது சோதனை என்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்நிலையில், பிசிசிஐ வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் விராட் கோலி தனது 100-வது சோதனை போட்டி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

100 சோதனை போட்டிகளில் விளையாடுவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. எனக்கு இது மிக நீண்ட பயணம். நான் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன். நான் எனது உடற்தகுதிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். இந்த சமயத்தில் கடவுளுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.

எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இது ஒரு பெரிய தருணம். என்னைப் பொறுத்த வரையில் இந்த சோதனை போட்டி குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். எனது பயிற்சியாளரும் இது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

நாட்டிற்காக அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணமே எப்போதும் இருந்தது. நான் ஜூனியர் கிரிக்கெட்டில் பெரிய இரட்டை சதங்களை அடித்துள்ளேன்.

எனவே, நீண்ட  நேரம் மட்டையாட்டம் செய்து வெற்றி பெற வேண்டும் அல்லது முதல் சுற்று முன்னிலை பெற வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. இதை தான் நான் எப்போதும் பின்பற்றி வருகிறேன். என்னைப் பொறுத்தவரை சோதனை கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »