Press "Enter" to skip to content

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் சோதனை – உணவு இடைவேளை வரை பாகிஸ்தான் அணி 105/1

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் சோதனைடில் பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக் ஜோடி முதல் மட்டையிலக்குடுக்கு 100 ரன்களை சேர்த்தது.

ராவல்பிண்டி:

பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 சோதனை, 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 சுற்றிப் போட்டியில் விளையாடுகிறது. 1998-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக பாகிஸ்தானில் பயணம் செய்து ஆடுவதால் இந்த தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது சோதனை போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்குகியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி மட்டையாட்டம் செய்வதாக அறிவித்தது.

இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருவரையும் மட்டையிலக்கு எடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்கள் திணறினர். இறுதியாக உணவு இடைவேளைக்கு 2 ஓவர் இருந்த நிலையில் அப்துல்லா ஷபீக் நாதன் லயன் பந்து வீச்சில் 44 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் மட்டையிலக்குடுக்கு 105 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

சிறப்பாக விளையாடிய இமாம் அரை சதம் அடித்தார். 12-வது சோதனை போட்டியில் விளையாடும் இமாம்க்கு இது 4-வது அரை சதம் ஆகும். பாகிஸ்தான் அணி உணவு இடைவேளை வரை 1 மட்டையிலக்கு இழப்பிற்கு 105 ஓட்டங்கள் எடுத்தது. இமாம் 57 ரன்னிலும் அசார் அலி 0 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »