Press "Enter" to skip to content

கடைசி சுற்றில் 3 மட்டையிலக்குடை இழந்த நியூசிலாந்து – த்ரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 6 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுக்க முடியாமல் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது.

மவுண்ட் மவுன்கானு:

12-வது ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கி விளையாடியது. தொடக்க வீராங்கனை ஹேலே மாத்யூஸ் அபாரமாக விளையாடி 119 ஓட்டத்தை எடுத்தார். கேப்டன் டெய்லர் 30, எஸ் கேம்பல்லே 20, சேடியன் நேசன் 36 ரன்களும் எடுக்க அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ஓட்டத்தில் வெளியேறினர்.

இந்நிலையில் வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 9 மட்டையிலக்கு இழப்புக்கு 259 ஓட்டத்தை எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகப்பட்சமாக தஹுஹு 3 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 160 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. 49.5 சுற்றில் அனைத்து மட்டையிலக்குடுகளையும் 256 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி சுற்றில் 6 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு 3 மட்டையிலக்குடுகள் கைவசம் இருந்தது. எளிதான முறையில் வெற்றி பெரும் என அனைவரும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 50-வது ஓவரையும் அவரது முதல் ஓவரையும் டியான்ட்ரா டாட்டின் வீசினார். 

முதல் பந்தில் ஒரு ஓட்டத்தை விட்டு கொடுத்த அவர் 2-வது பந்தில் கேட்டி மார்ட்டினை எல்.பி.டபுள்யூ. முறையில் மட்டையிலக்கு எடுத்தார். 3-வது பந்தில் 1 ஓட்டத்தை எடுக்க நியூசிலாந்து அணிக்கு 3 பந்தில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் மீண்டும் ஒரு மட்டையிலக்குடை எடுத்து அசத்தினார். இதனால் 2 பந்துகளுக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 5 பந்தில் ஒரு ஓட்டத்தை எடுக்க முயன்ற போது ஓட்டத்தை அவுட் முறையில் ஜோனஸ் அவுட் ஆனார். இதனால் நியூசிலாந்து அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

நியூசிலாந்து அணி கடைசி சுற்றில் மட்டும் 3 மட்டையிலக்குடுகளை இழந்தது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »