Press "Enter" to skip to content

திருமழிசை பேரூராட்சி தலைவர் தேர்தல்: 2 ஓட்டு செல்லாதவையாக அறிவிப்பு- அ.தி.மு.க.வினர் மறியல்

அ.தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் ஒன்றுகூடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மறைமுக தேர்தல் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

திருவள்ளூர்:

திருமழிசை பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க சார்பில் வடிவேலு அ.தி.மு.க. சார்பில் 7-வது வார்டு உறுப்பினர் ரமேஷ் போட்டியிட்டனர்.

இதில் தி.மு.கவுக்கு 7 வாக்குகளும், அ.தி.மு.கவுக்கு 6 வாக்குகளும் பதிவானதாகவும், 2 வாக்குகள் செல்லாதவை என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனால் தி.மு.க 4-வது வார்டு உறுப்பினர் வடிவேலுவை பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றதாக பேரூராட்சி செயல் அலுவலர் ரவி அறிவித்தார்.

2 அ.தி.மு.க வாக்குகள் செல்லாத வாக்குகள் என்று அறிவிக்கப்பட்டதாக கூறி அ.தி.மு.க.வினர் ரகளையில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் ஆவடி துணை கமி‌ஷனர் மகேஷ் தலைமையில் பூந்தமல்லி சரக உதவி ஆணையர் முத்து வேல் பாண்டி, வெள்ளவேடு ஆய்வாளர் அன்புச் செல்வி மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

மேலும் அ.தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் ஒன்றுகூடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மறைமுக தேர்தல் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

அப்போது பூந்தமல்லி சரக உதவி கமி‌ஷனர் 4-வது வார்டு உறுப்பினர் ரமேஷை கைது செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.கவினர் வாகனத்தின் முன்பு படுத்து மறியலில் ஈடுபட்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »